Course Code: SCO231

Synopsis

நகரத்தின் பகுதிகள் எவை? நாம் இன்றைய சூழலில் வளரும் நகரத்தின் சமூக, பண்பாட்டு, பொருளியல் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்? நகர வாழ்வில் தொழில்நுட்பம் தரும் புதிய விளைவுகளை எவ்வாறு ஏற்கப்போகிறோம்? இப்பாடம் வெளியின் இருப்பினை அறிமுகப்படுத்துகிறது: வெளியும் இடமும் எவ்வாறு நகரினை உருவாக்குகிறது, பொருளியல் சமூகவியல் பின்புலத்தில் உலகமயமாதலில் இந்நகரம் எவ்வாறு இயங்கும். நகர்மயமாதலில் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் விளைவுகள். இப்போக்கில் மக்கள், இடம், வெளி தொழில்நுட்பம் பற்றிய சமூகவியல் விசாரணைகள்.
Level: 2
Credit Units: 5
Presentation Pattern: Every July

Topics

  • நகரினைப் புரிந்துகொள்ளல்
  • வரலாற்றுப் பின்னணியில் நகரினைப் புரிந்துகொள்ளல்
  • நகரில் சமூக வாழ்வு
  • நகர வளர்ச்சியில் எழும் சமூக சமத்துவமின்மையை அறிதல்
  • இயற்கைச் சூழலை ஆளுதல்
  • நகர்மயமாதலில் உருவாகும் சூழலியல் பேரிடர்களைக் குறித்து அறிதல்
  • மாற்று வளர்ச்சி
  • நகர்மயமாதல் மரபின்மீதும், அவற்றின் வேர்கள்மீதும் எற்படுத்தும் தாக்கத்தினை விளக்குதல்
  • மின்னூடக நகரம்
  • தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வாறு நகரத்து சவால்களைச் சமாளிக்கும் என்பதனை அறிதல்
  • தென்கிழக்காசிய நகரிய சிக்கல்களை எதிர்கொள்ளல்
  • தென்கிழக்காசிய நகரியத்தின் சவால்களை எதிர்கொள்வதில் உள்ள சிக்கல்கள், தீர்க்கும் வழிமுறைகள்

Learning Outcome

  • நகர வெளிகளை உருவாக்குதலில் வெவ்வேறு நபர்கள், நிறுவனங்களின் பங்களிப்பை வரையறுத்தல்.
  • நகரம் பற்றிய ஆய்வுகளில்/புரிதலில் வெவ்வேறு தரத்திலான ஒழுக்கம் பற்றியும், கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையும் விவாதிக்கப்படும்.
  • நகர வாழ்வின் அன்றாட சூழலைக் கொள்கை, கோட்பாடுகளோடு தொடர்புறுத்தி நகரமயமாதலின் சிக்கல்களைப் பகுப்பாய்வு செய்தல்.
  • கள ஆய்வுகளின் அடிப்படையில் நகரிய உருவாக்கத்தில் சமூகப் பண்பாட்டு - பொருளியல் சட்டகத்தினை இனம் காணுதல்.
  • எழுத்திலும், வெளிப்படுத்துதலிலும் கோட்பாடு உருவாக்கும் பாதிப்புகளைத் தெளிவாகவும், அழுத்தமாகவும் விளக்குதல்.
  • நகரிய சிக்கல்களைச் சிந்தனாப் பூர்வமாகவும், படைப்பாற்றல் உத்தியுடனும் கருத்துகளாக வெளிப்படுத்துதல்.