Singapore University of Social Sciences

கற்பது எதற்கு?

கற்பது எதற்கு? (HBC215)

Applications Open: 01 May 2024

Applications Close: 15 June 2024

Next Available Intake: July 2024

Course Types: Modular Undergraduate Course

Language: Tamil

Duration: 6 months

Fees: $1391.78 View More Details on Fees

Area of Interest: Humanities and Social Sciences

Schemes: Alumni Continuing Education (ACE)

Funding: To be confirmed

School/Department: School of Humanities & Behavioural Sciences


Synopsis

HBC215 கற்பது எதற்கு? என்ற இந்தப் பாடம் மனிதகுல வரலாற்றில் வாசித்தல் எவ்வாறு ஒரு அவசியச் செயலாக வளர்ந்தது என்பதை ஆராய்கிறது. குகை வரைபடங்கள், கையால் எழுதப்பட்ட பதிவுகள், நூல்கள் மற்றும் சமூக வலைதளங்கள் எனத் தகவல் பரிமாற்ற முறைகள் மாறி வந்துள்ளது என்றாலும், இவை யாவுக்கும் ஒருவரின் வாசிப்புத் திறனே அடிப்படையாக அமைந்துள்ளது. இது காலப்போக்கில் மாறாமல் நிலைத்திருக்கிறது. இப்பாடமானது, அன்றாட வாழ்வில் வாசித்தலின் முக்கியத்துவத்தினை அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி, எவ்வாறு வாசித்தல் நல்ல மற்றும் தீய விளைவுகளை வருவிக்கலாம் என்பதையும் மாணவர்களுக்கு உணர்த்த முற்படுகிறது. மத நூல்கள், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை போன்ற தாக்கம்மிக்க நூல்களை வாசிப்பது மூலமாக நாம் சமுதாயத்தில் நல்ல உறுப்பினர்களாகச் சமூகமயமாக்கப்படலாம் அல்லது கற்பனைகளுக்கு மிஞ்சிய தீயச் செயல்களைச் செய்யவும் தீவிரவாதப் படுத்தப்படலாம். இதற்குப் பல உதாரணங்கள் வரலாற்றில் உள்ளன. கடைசியாக, உடற்பயிற்சியினைப் போல, வாசித்தலும் உடல் ஆரோக்கியப் பயன்களைத் தரலாம். ஆறு வாரங்களில், வாசிக்கும் திறனானது தனிப்பட்ட நபருக்கும் மட்டுமின்றி சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் முக்கியமானது என்பதை மாணவர்கள் அறிந்துகொள்வர்.

Level: 2
Credit Units: 5
Presentation Pattern: Every July
E-Learning: BLENDED - Learning is done ENTIRELY online using interactive study materials in Canvas. Students receive guidance and support from online instructors via discussion forums and emails. There are no face-to-face sessions. If the course has an exam component, this will be administered on-campus.

Topics

  • ஏன் வாசிக்க வேண்டும்?
  • வாசித்தலும் மனித சமுதாயமும்
  • ஒருவர் வாசிக்கும் பொழுது என்ன நிகழ்கிறது?
  • வாசித்தலால் சமூகமயமாக்கப்படுதல் (1): நம் நடத்தையினைக் கட்டமைத்தல்
  • வாசித்தலால் சமூகமயமாக்கப்படுதல் (2): பண்பாட்டுப் பரிமாற்றம்
  • வாசித்தலால் தகவல்தொடர்பு (1): பிரச்சாரம்
  • வாசித்தலால் தகவல்தொடர்பு (2): தீவிரமயமாதல்
  • அணிதிரட்டுவதற்காக வாசித்தல் (1): சமூக இயக்கங்கள்
  • அணிதிரட்டுவதற்காக வாசித்தல் (2): அரசியல் இயக்கங்கள்
  • வாசிப்பும் ஆரோக்கியமும் (1): நீண்ட ஆயுள் எதிர்பார்ப்பு
  • வாசிப்பும் ஆரோக்கியமும் (2): சமூகத் தனிமைப்படுத்தல்
  • வாசிப்பும் தொழில்களும் 4.0
  • வாசிப்பின் எதிர்காலம் ஒரு செயல்பாடாக

Learning Outcome

  • அன்றாட வாழ்க்கையில் வாசிக்கும் திறனின் முக்கியத்துவத்தினை அடையாளம் காணுதல் (அ) அறிதல்.
  • நல்ல மற்றும் தீய மாற்றங்களுக்கும் வாசித்தலின் பயனைக் கண்டறிதல் (அ) இனம் காணுதல்.
  • சமுதாய மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்குப் பின்னரும் வாசித்தல் ஏன் முக்கியமானதாகவே திகழ்கிறது என்பதை விவாதித்தல்.
  • வாசித்தல் எவ்வாறு ஒருவரின் கண்ணோட்டம், மனப்பாங்கு மற்றும் நடத்தையினை வடிவமைக்கிறது என்பதை விவரித்தல்.
  • நடத்தை அறிவியலின்படி வாசித்தலின் பயன்களைக் கண்டறிதல் (அ) இனம் காணுதல்.
  • சமுதாயத்தின் மீது நல்ல, தீய விளைவுகளை வருவிக்ககூடிய சமுதாயத் திறனாக வாசித்தல் திகழ்கிறது என்பதைக் காட்டுதல்.
Back to top
Back to top