Synopsis
இந்தப்பாடம் எண்முறை (டிஜிட்டல்) பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்களையும், தொழில்நுட்ப பெருநிறுவனங்களின் உருவெடுத்தலையும் கற்பிக்கும். முதலாவதாக, உலகமயமாக்கல் 2.0 மற்றும் தொழில்புரட்சி 4.0 ஆகியவைக்கும், முந்தைய தொழில் புரட்சிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் சுருக்கமான மதிப்பாய்வு அளவு வரலாற்று ஒப்பாய்வு மூலம் அறிமுகப்படுத்தப்படும். 4.0-ன் தனித்துவ தன்மைகள் மற்றும் சிறப்பியல்புகள் பலவாதங்கள் மூலமாக முன்னிலைப்படுத்தப்படும். அமெரிக்கா மற்றும் சீனாவில் அதிகமாகக் காணப்படும் தொழில்நுட்ப பெருநிறுவனங்களின் பொருளாதார, அரசியல் மற்றும் சமுதாய தாக்கங்களை எவ்வாறு அடையாளம் கொண்டு, பரிசீலித்து, தக்க வாதங்களை முன்வைப்பது என்பது கற்பிக்கப்படும். மேலும், எண்முறை பணியிடம், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை முறைக்கும், பாரம்பரியதொழில்கள், எண்முறை அல்லாத தொலைதொடர்பு வசதிகள் மற்றும் பழைய தொழில்துறை பெருநிறுவனங்களுக்கும் இடையிலான வேற்றுமைகள் கற்பிக்கப்படும். இறுதியாக, எண்முறைதொழில் நுட்பங்களின் பயன்படுத்தலில் உள்ள பல சர்ச்சைக்குரிய விவாதங்கள் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவின் தாக்கம், பொய் செய்திகளின் பெருக்கம் மற்றும் தொழில்நுட்ப பெரு-நிறுவனங்களின் எழுச்சி ஏற்படுத்தியுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமுதாய தாக்கத்தால் தனிமனித அந்தரங்க உரிமைகளில் எழும் சிக்கல்கள் ஆகியவை விவாதிக்கப்படும். இதன் மூலமாக நடப்புலக வாழ்க்கையினைப் பாதிக்கும், பொருளாதார மாற்றங்களை/மறுசீரமைப்புகளை ஏற்படுத்தும் வழக்கு ஆய்வுகளில் எவ்வாறு வாதங்களைப் பயன்படுத்துவது என்பது காண்பிக்கப்படும். மட்டுமின்றி, எண்முறை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலில் உள்ள பலன்களையும், சவால்களையும் சோதித்து, பரிசீலித்து திறனாய்வுடன் வாதிடும் திறனுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
Level: 1
Credit Units: 2.5
Presentation Pattern: Every July
E-Learning: - Learning is done ENTIRELY online using interactive study materials in Canvas. Students receive guidance and support from online instructors via discussion forums and emails. There are no face-to-face sessions. If the course has an exam component, this will be administered on-campus. To be confirmed